மனுக்கள் பெறும் முகாம்

 

காஞ்சிபுரம், ஆக. 26: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி, 27.8.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மனுக்கள் பெறவுள்ளார். இந்த முகாமில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி, மனுக்கள் மீது கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு