மனித உரிமை தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி

காஞ்சிபுரம்: மனித உரிமை தினத்தை முன்னிட்டு, கலெக்டர் ஆர்த்தி தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். மனித உரிமைகள் தினத்தையொட்டி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலத்தில்,  கலெக்டர் ஆர்த்தி தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்புச் சங்கம் சார்பில் மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. தலைவர் வக்கீல் பெர்ரி தலைமையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனையடுத்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், தனியார் பள்ளிகள் நடத்த விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.தனியார் பள்ளிகள் 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையால் சுமார் 100 மாணவர்கள் படிக்கும் சிறிய பள்ளிகள் இழுத்து மூடப்படும் நிலை உள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், படிக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என தீர்மானம் நிரைவேற்றப்பட்டது….

Related posts

பொதுமாறுதல் கலந்தாய்வு: 3,000 ஆசிரியர்கள் இடமாற்றம்

திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல்

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு