மனநலம் பாதிக்கப்பட்டவரின் பசியை போக்கிய போலீசார்

சோளிங்கர் : சோளிங்கரில் இருந்து கீழாண்டை மோட்டூர் செல்லும் வழியில் உள்ள கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கடந்த 2 தினங்களாக மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதிமக்கள் சோளிங்கர் போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார்கள்  வெங்கடேசன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மயங்கிய நிலையில் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டனர். இதையடுத்து, அவரை அருகில் இருந்த விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த பம்பு செட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவரை குளிப்பாட்டினர். பின்னர், உணவு வாங்கி கொடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவரின் பசியை போக்கினர். போலீசாரின் இந்த மனித நேய செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்….

Related posts

திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கு கால்பந்துப் போட்டி

கடலூர் முதுநகரில் சமூகவிரோதிகளின் கூடாரமான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம்

மதுரை மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!!