மத்திய கூட்டுறவு வங்கி பேரவை கூட்டம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 110வது பொதுப்பேரவை கூட்டம் நேற்று வங்கியின் தலைமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சிவமலர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கியின் பங்குதாரர்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் தொடக்க கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில், வங்கியின் பொதுமேலாளர்ஸ்ரீனிவாசன் ஆண்டறிக்கை வாசித்தார்.

ங்கியின் உறுப்பினர்கள் வங்கியின் ஆண்டறிக்கையை ஏற்று, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் திருவள்ளூர் மண்டல இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் மலர்விழி, இணை இயக்குநர் (விவசாயம்) ராஜ்குமார், இணை இயக்குநர் கணேஷ், வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் வெங்கட்ரமணன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி