மது வாங்க பணம் தராததால் மருத்துவ உதவியாளருக்கு சரமாரி பாட்டில் குத்து: 2 ரவுடிகள் கைது

 

பெரம்பூர், டிச.10: புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (33). தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, ஓட்டேரி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு அருகே நடந்து சென்றபோது, போதையில் வந்த 2 பேர், இவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள், தங்களிடம் இருந்த மது பாட்டிலை உடைத்து லிவிங்ஸ்டன் தலை மற்றும் மார்பில் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த லிவிங்ஸ்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அயனாவரம் தேவராஜ் தெருவை சேர்ந்த பிரகாஷ் (23), அவரது அண்ணன் சூளை பகுதியை சேர்ந்த ராம்குமார் (29) ஆகிய இருவர் என தெரிந்தது. இதில், பிரகாஷ் மீது புளியந்தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 13 குற்ற வழக்குகள் இருப்பதும், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், ராம்குமார் மீது 14 குற்ற வழக்குகள் இருப்பதும், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை