மது, புகையிலை விற்றதாக 8 பேர் அதிரடி கைது

ஈரோடு, ஜன. 7: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, மாவட்டத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக ஈரோடு டவுன் நேதாஜி சாலையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(38),அந்தியூர் சிவசத்தி நகரில் தர்மராஜ்(20), பெருந்துறை திங்களூர் சாலையில் சந்திரசேகரன்(43),பெருந்துறை முருகானந்தம்(45),கொடுமுடி பஸ் ஸ்டாண்டில் அண்ணாமலை(50), கடம்பூர் சுஜில்கரை பஸ் ஸ்டாப்பில் வரதராஜ்(61) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து, 39 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், பவானி சித்தார் பஸ் ஸ்டாப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக பவானி கேசரி மங்களத்தை சேர்ந்த முருகன்(51), பங்களாபுதூர் டிஎன் பாளையம் அரச மரத்து வீதியில் வாணிப்புதூர் காட்டூர் முதல் வீதியை சேர்ந்த திருமுருகன்(50) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி