மதுரை வைகை ஆறு தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் குப்பைகள்

மதுரை, ஜூலை 2: தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து துவங்கும் வைகையாறு 258 கி.மீ., தூரம் பயணித்து ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாயில் கலக்கிறது. மதுரை மாவட்டத்தில் நகர் மற்றும் புறநகர் என இருபகுதிகளிலும் சேர்த்து 44 கி.மீ., தூரம் வைகை ஆறு பயணிக்கிறது. இதில், 13.50 கி.மீ., தூரம் மாநகராட்சி எல்லைக்குள் செல்கிறது. மாநகராட்சி பகுதியில் ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த இரு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்தடுப்பணைகளில் குப்பை கழிவுகள் தேங்கி நின்று, தண்ணீர் செல்லாமல் தடுக்கின்றன. இதனால், பெரு மழையின்போது ஆற்றில் வெள்ளம் வந்தால் தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் செல்வது வாடிக்கையாகியுள்ளது. தற்போது மழை இல்லாத சூழல் நீடிப்பதால் தடுப்பணைகளில் உள்ள கழிவுகளை அகற்ற நீர்வளத்துறை முன்வர வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை