மதுரையில் 750 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது: 2 பேர் கைது

 

மதுரை, ஆக. 19: தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு சென்னை உணவு கடத்தல் பிரிவு தலைவர் வன்னிய பெருமாள் உத்தரவுப்படி, மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் விஜய் காரதிக் ராஜா தலைமையில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மதுரை அருகே பெருங்குடி பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

மதுரை சரக டிஎஸ்பி ஜெகதீசன், மதுரை பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ வாகனத்தை சோதனை செய்த போது அதில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த செல்வகுமார், சண்முகவேல் ஆகியோரை கைது செய்து, ரேஷன் அரிசி, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை