மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

 

மதுரை, ஜூன் 25: மதுரையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பைபாஸ் ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு சங்க தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். மதுரை நகர் செயலாளர் லெனின் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.

போராட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 14 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அனைத்து பண பலன்கள் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணியின் போது இறந்த தொழிலாளரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோல் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் உண்ணாவிரதம் நடந்தது.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்