மதுரையில் இன்று தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மதுரை: மதுரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறை சார்பில் இன்று தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா அறிஞர் அண்ணா மாளிகை நடைபெறுகிறது. காலை 9.30 மணி அளவில் இந்த விழா நடைபெறுகிறது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்று மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.  தூய்மைப் பணியாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள், பாதுகாப்பு உறுதி செய்தல். தூய்மைப் பணிக்கான இயந்திரங்களை இயக்க திறன் பயிற்சி அளித்தல் ஆகியவை தொடக்கி வைக்கப்படுகிறது.  மாற்றுத் தொழில் தொடங்க வங்கிக் கடன் வசதி செய்து கொடுக்கப்படும் முதற்கட்டமாக ஐந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விரிவுபடுத்தப்படும். பணியாளர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி. உறுதி செய்யப்படும் வகையில் மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைக்கயுள்ள்ளார். தூய்மைப் பணியாளர்கள் நலனில் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். …

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு