மதுராந்தகம் நகராட்சி சார்பில் காசநோய் மருத்துவ முகாம்

மதுராந்தகம்: உலக காசநோய் தினத்தையொட்டி மதுராந்தகம் நகராட்சி சுகாதாரத்துறை, ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம், ஆதிபராசக்தி மருத்துவமனை ஆகியவை இணைந்து மருத்துவ பரிசோதனை முகாமை நேற்று மதுராந்தகத்தில் நடத்தியது. நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் அருள் முன்னிலை வகித்தார். மருத்துவர் புவனேஸ்வரி வரவேற்றார். முகாமில், மதுராந்தகம் நகராட்சியில் பணி புரியும் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். மேலும், ரண ஜன்னி தடுப்பூசி ஊசி போட்டு கொண்டு மருந்து மாத்திரை பெற்று சென்றனர். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காசநோய் குறித்த ஓவியப் போட்டி நடந்தது. இதில், சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுத்து, அந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், நகர மன்ற உறுப்பினரும், திமுக நகர செயலாளருமான குமார், சுகாதார அலுவலர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

கனமழையால் வேகமாக நிரம்பும் கர்நாடக அணைகள் காவிரியில் 25 ஆயிரம் கனஅடிநீர் திறப்பு

தனியாக வரி விதித்து வசூலித்தும் ஒன்றிய பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து சரிவு: புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்; இந்த ஆண்டாவது உயர்த்தப்படுமா?

ஆம்பூர் பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒற்றை தந்த யானை வேலூர் எல்லையில் முகாம்