மதுராந்தகம் காவல்துறை சார்பில் வியாபாரிகளுக்கு புகையிலை விழிப்புணர்வு கூட்டம்

 

மதுராந்தகம்: மதுராந்தகம் காவல்துறை சார்பில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பதை கைவிடக்கோரி வியாபரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் காவல்துறை சார்பில் குட்கா, புகையிலை விற்பனையை முற்றிலும் ஒழிப்பது குறித்த வியாபாரிகள் மற்றும் போலீசார் இணைந்த ஒருங்கிணைந்த விழிப்புணர்வு கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில், மதுராந்தகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

வணிகர் சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். வணிகர் சங்க செயலாளர் அன்சர் அப்துல் சமத் அனைவரையும் வரவேற்றார். இதில், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வியாபாரிகளிடம் பேசுகையில், ‘குட்கா புகையிலை விற்போர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான தண்டனைகளை அமுல்படுத்தி உள்ளது. இதனால், வியாபாரிகள் அறியாமல் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பதை முற்றிலும் கைவிட வேண்டும்.

மேலும், யாரேனும் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்தால், அதுகுறித்த தகவலை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் மதுராந்தகம் நகரை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி முடிவில் மதுராந்தகம் நகரம் போதை இல்லா நகரமாக மாற்ற வேண்டும் என்று போலீசார் மற்றும் வியாபாரிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி