மதுராந்தகத்தில் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்

 

மதுராந்தகம், செப். 2: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் முதல் மாவட்ட பேரவை கூட்டம் மதுராந்தகம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னதாக மாநில பொதுச் செயலாளர் மாயமலை தொடக்கவுரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் சசிரேகா வரவேற்புரையாற்றினார். மணி, கீதா, தினகரன், தேவி, செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மதுராந்தகம் ஒன்றிய பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில துணைத்தலைவர் எட்டியப்பன், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தலைவர் ஆறுவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் பரிமளா சிறப்புரையாற்றினார். இதில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், இலவச பஸ் பாஸ், இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்