மதுபோதை தகராறில் கீழே விழுந்து மயக்கம் நண்பர் இறந்துவிட்டதாக நினைத்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி: திருத்தணி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கீழே விழுந்ததால் நண்பர் இறந்துவிட்டதாக நினைத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி அடுத்த சின்னம்மாபேட்டையை சேர்ந்தவர் சந்துரு(35). தொழுதாவூர் காலனி கலைஞர் நகரை சேர்ந்தவர் ரஜினி(44). நண்பர்களான இருவரும் தினமும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளனர். அப்போது ரஜினி ஒரு குவார்ட்டர் பாட்டிலை சந்துருவுக்கு தெரியாமல் மறைத்துவைத்ததாக தெரிகிறது. இதுபற்றி சந்துரு கேட்டபோது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது போதையில் தள்ளாடிய ரஜினி கீழே விழுந்தபோது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மயக்கமடைந்தார். இதை பார்த்தவர்கள் ரஜினி இறந்துவிட்டார் என்று தெரிவித்ததுடன் உடனடியாக அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நண்பர் ரஜினி இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியிலும், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்திலும் வீட்டுக்கு வந்த சந்துரு மின்விசிறியில் தூக்கிட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த திருவாலங்காடு போலீசார் சம்பவ இடம் சென்று சந்துரு சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். …

Related posts

மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்

திருப்பாலைக்குடி, உப்பூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி செம ஜோர்

யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி திறக்க ஆயத்தப் பணி தீவிரம்: அறநிலையத்துறை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணிப்பு