மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சசிகலா வருகை – அவசரமாக வெளியேறிய எடப்பாடி

சென்னை: அதிமுகவின் நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசி வரக்கூடிய சசிகலா நேரடியாக அதிமுக தொண்டர்களின் மனநிலையை அவரது பேச்சு பிரதிபலிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். இன்றைய தினம் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனைக்கு வந்துள்ளார். 10 நிமிடங்கள் கூட முடியாத நிலையில் சசிகலா மருத்துவமனைக்கு வரும் தகவல் தெரிந்தவுடன் உடனடியாக நலம் விசாரிப்பத்தை முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டு சென்றார்.அதிமுகவின் கொடியை பயன்படுத்த கூடாது என்று ஏற்கனவே சசிகலா தரப்பிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதிமுக கொடி கட்டிய வாகனத்தில், குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி மருத்துமனைக்கு சென்றுள்ள அதேவேளையில் சசிகலா மருத்துவமனைக்கு சென்றிருப்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. சசிகலா மருத்துவமனைக்கு உள்ளே சென்று மதுசூதனன் உடல்நிலை குறித்து மருத்துவகுழுவினருடன் கேட்டறிந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் அதிமுக சார்பாக பல கருத்துக்களை பேசி வருகிறார். கட்சி மீது தனக்கு அதிகபட்சமான ஈர்ப்பு இருப்பதாகவும் அவர் தொடர்ச்சியாக பேசி வருகிறார். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த போதும் மீண்டும் கட்சி கொடியுடன் சசிகலா வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

சொல்லிட்டாங்க…

குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : வேல்முருகன்

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி