மண்டபம் தோணித்துறை பகுதியில் மின்கம்பம் அமைக்கும் பணி தீவிரம்

மண்டபம், ஜன. 13: பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாம்பன் பாலத்தின் மேற்குப் பகுதியான மண்டபம் தோணித்துறை பகுதியில் இருந்து மண்டபம் ரயில் நிலையம் வரை மின்கம்பம் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து வரும் நிலையில் வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் மின்சாரம் மூலம் ரயில் இயக்குவதற்கு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாம்பன் பாலத்தின் தெற்கு பகுதியான தோணித்துறை பகுதியிலிருந்து மண்டபம் ரயில் நிலையம் வரை மின்கம்பங்கள் அமைப்பதற்கு பணிகள் நேற்று நடைபெற்றது. மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா பகுதியில் தண்டவாளம் அருகாமையில் வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களை பணியாளர்கள் ட்ராலி மூலம் மின் கம்பம் ஊண்டும் பகுதிக்கு எடுத்து செல்லும் பணியில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

Related posts

நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம்

ஓவரூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

ஒன்றிய அரசை கண்டித்து திமுக வழக்கறிஞரணியினர் ஆர்ப்பாட்டம்