மண்டபம் சந்தையில் மின் விளக்கு, குடிநீர் வசதி வேண்டும்: பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை

 

மண்டபம்,செப்.30: மண்டபம் பேரூராட்சி பகுதியில் வாரச்சந்தை நடைபெற்று வரும் பகுதியில், அடிப்படை வசதிகள் குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் செய்தார். மண்டபம் பேரூராட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட வாரச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இச்சந்தையில் மண்டபம் பேரூராட்சி வசித்து வரும் மக்கள் மட்டுமல்லாமல் மண்டபத்தை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு வருகின்றனர்.

அதுபோல மதுரை,ராமநாதபுரம், பரமக்குடியைச் சேர்ந்த காய்கறி மற்றும் மளிகை பொருள்களை வியாபாரிகளும் அதிகமானோர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்தையில் விற்பனையாகும் பொருட்களின் தரம் குறித்தும் பொருள் வாங்க வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் கூடுதல் மின் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

 

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி