மணவாளக்குறிச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி

 

குளச்சல், மே 27 : வைகாசி விசாகத்தை முன்னிட்டு மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோயிலிலிருந்து திருச்செந்தூர் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு வேல்காவடி, புஷ்ப காவடி மற்றும் பறக்கும் காவடி புறப்பட்டுச்செல்லும் நிகழ்ச்சி கடந்த 24ம் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

3ம் நாளான நேற்று தீபாராதனை, காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோயிலிருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கிராம கோயில்களுக்கு சென்று விட்டு திரும்பி கோயிலை வந்தடைந்தது. மாலையில் வேல்காவடி, புஷ்பக்காவடி மற்றும் பறக்கும் காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோயிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் புறப்பட்டுசென்றது

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை