மணல் குவாரிகளை தடை செய்ய முற்றுகை போராட்டம்

 

திருச்சி: மணல் குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்ட காவிரி ஆற்றில் இயங்கும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், மணல் குவாரிகளில் இருந்து வரும் லாரிகளால் மக்களுக்கு பேராபத்து ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் குவாரிகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீரும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை தடுக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் அலுவலகம் முன்பு தலைவர் அய்யப்பன் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் வக்கீல் சங்கர் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்