மணல் கடத்தல் ஜேசிபியை பறிமுதல் செய்த போலீசாரை தாக்கி மிரட்டல் தந்தை, 2 மகன்கள் மீது வழக்குப்பதிவு

 

செய்யாறு, மே 30: செய்யாறு அருகே மணல் கடத்தல் ஜேசிபியை பறிமுதல் செய்த போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்ைத, 2 மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பாலாற்றுப்படுகையில் நேற்று முன்தினம் இரவு ஜேசிபி மூலம் மணல் அள்ளி லாரிகளில் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த மணல் கடத்தும் கும்பல் தப்பி ஓடியது. பின்னர், அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபிஐ தூசி போலீசார் விஜயகுமார், ரஞ்சித் ஆகியோர் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். உக்கம்பெரும்பாக்கம் காலனி அருகே இரவு 9 மணியளவில் வந்தபோது ஜேசிபி திடீரென பழுதானதால் அதை போலீசார் சரி செய்து கொண்டிருந்தனர்

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு