மணலி மண்டல அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முடிந்து நேற்று பிற்பகல் 3 மணியுடன் வாபஸ் பெறும் நேரமும் முடிந்தது. இதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் அந்தந்த மண்டலங்களில் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் பார்வைக்காக அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டது.இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 29 ஆயிரத்து 134 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 13 ஆயிரத்து 535 மின் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் மின் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மணலி மண்டலத்தில் உள்ள தனி, தனி அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை