மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கு மேலும் 4 பேர் கைது

ஆலந்தூர்: மடிப்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் செல்வத்தை (37),  கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி கொலை செய்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவு குற்றவாளியான கமுதி முத்துசரவணனை (31) தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன் கைது செய்து விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்ட செல்வத்திற்கும் வட்ட துணை செயலாளர் குட்டி (எ) உமா மகேஸ்வரன் (43), சகாய டென்சி (55) ஆகியோருக்கும் இடையே போட்டி இருந்துள்ளது. அதேபோல் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இடையூறாக செல்வம் இருந்ததால் பத்திரப்பதிவு எழுத்தர் ஜெயமுருகன் (42), புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ரவி (எ) ரமேஷ் (39) ஆகிய 4 பேரும் செல்வத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கூலிப்படை தலைவன் கமுதி முத்து சரவணனுக்கு ₹40 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி செல்வத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். …

Related posts

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

காரில் புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது