மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைவு எதிரொலி!: சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி..உற்சாகத்தில் பெற்றோர்!!

பெய்ஜிங்: சீனாவில் பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு முடிவு செய்தது. இந்நிலையில், சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க பல ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை சீனா அமல்படுத்தியது. சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை கட்டுப்பாடு அதன் தலைவர் மாவோ காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவர் இறந்த பின்பே, அது அமலுக்கு வந்தது. 
சுமார் 40 ஆண்டுகள் நீடித்த அந்த கட்டுப்பாட்டால் மில்லியன் கணக்கான கட்டாய கருக்கலைப்புகளும், குடும்ப கட்டுப்பாட்டு அரவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. இதையடுத்து, ஒரு குழந்தை திட்டத்தை அடுத்து மக்கள் தொகை கட்டுக்குள் வந்ததால் 2016ல் சீனா கொள்கையை தளர்த்தியது. அதன்படி குடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2016ல் தளர்வை சீன அரசு அறிவித்தது. தொடர்ந்து குழந்தை பிறப்பு கொள்கையில் தளர்வை அறிவித்த பிறகும் மக்கள் தொகை எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. இந்நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குடும்பத்துக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு