மக்களைத் தேடி மருத்துவ திட்டம்: மூதாட்டி வீட்டிற்கு சென்று கலெக்டர் ஆய்வு

பரமக்குடி, செப். 21: நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம் கங்கைகொண்டான் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுவரும் பயனாளி முத்தம்மாளை (60), அவரது இல்லத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் நேரில் சென்று பார்வையிட்டு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பாக கேட்டறிந்தார். அப்போது முத்தம்மாள் கலெக்டரிடம் கூறுகையில், நான் உடல் நலம் சரியில்லாத நிலையில் வெளியூருக்கு அடிக்கடி சென்று சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்தேன். தற்போது எனது வீட்டிற்கே வருகை தந்து சிகிச்சை அளிக்கின்றனர். இதன் மூலம் எனக்கு புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் உருவாகிறது. விரைவில் பூரண குணமடைந்து விடுவேன் என்ற நம்பிக்கை உருவாகிறது, என்றார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி