மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 6 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் உவர்நீரில் மீன் வளர்ப்பிற்கு மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தஞ்சாவூர், ஆக. 28:உவர்நீரில் (கொடுவாய் மீன்) மீன் வளர்ப்பிற்கு மானியம் வழங்கும் திட்டம் மற்றும் உவர்நீர் இறால் வளர்ப்பிற்கு மானியம் வழங்கும் திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் (கொடுவாய் மீன்) மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் புதிதாக கொடுவாய் மீன்குளங்கள் அமைத்திட விரும்புவோர்கள் பயன்பெறும் வகையில் புதிய மீன்குளங்கள் அமைக்கவும், அதற்கான உள்ளீட்டு செலவினங்களுக்கு மானியம் வழங்கிடும் தீட்டம் பொதுப்பிரிவினருக்கு 3 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய மீன்குளம் ஒரு ஹெக்டேர் அளவில் அமைத்திட செலவினம் ரூ.8 லட்சம் எனவும் உள்ளிட்டு செலவினம் ரூ.6 லட்சம் எனவும் நிரணயித்து அதனில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.5.60 லட்சம் வழங்கப்பட உள்ளது.

மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீட்டு செலவினங்களுக்கான மானியம் பொதுப்பிரிவினருக்கு 6 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பதிய இறால் வளர்ப்பு குளம் அமைப்பதற்கும் மற்றும் உள்ளீட்டு செலவினத்திற்கான மொத்த செலவினம் ரூ.14 லட்சத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.5.60 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில், முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, தஞ்சாவூர், அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல் அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது 04362-235389 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு செப்.25க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிலம்ப போட்டி வெற்றியை தோல்வியாக அறிவிப்பு; மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்: மேலக்கோட்டையூரில் பரபரப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை: பவள விழா ஏற்பாடு பணி ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி