மகிமாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு: ஈரோடு மகிமாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஈரோடு  மகிமாலஸ்வரர் கோயில் 46ம் ஆண்டு சித்திரை சதய விழா மற்றும் தேர்த்திருவிழா  கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. நேற்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி  நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.  காலை 7 மணிக்கு அப்பரடிகள் குரு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து  திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை 27ம் தேதி பரிவேட்டை நிகழ்ச்சி  நடக்க உள்ளது. வருகிற 30ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகின்றது. …

Related posts

அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

அமராவதி முதலை பண்ணைக்குள் சுற்றுலா பயணி தொலைத்த 3 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்கள்