மகளிர் உரிமை தொகை பெற இன்று ரேசன் கடைகளில் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம், ஆக.4: ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலை கடை வாரியாக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், மொத்தம் உள்ள 775 நியாய விலைக் கடைகளில் முதற்கட்டமாக 326 நியாய விலைக்கடைகளில் கடந்த 24.7.2023 முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்ட முகாம் நடைபெற்று வரும் 326 நியாய விலைக் கடைகளுக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாத விடுபட்ட, குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்ய ஏதுவாக இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. முதற்கட்ட முகாம் நடைபெறும் மையங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை மற்றும் மின் கட்டண ரசீது ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை