போலீஸ் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? தஞ்சாவூர் சரக டிஐஜி ஆய்வு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு போலீஸ் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக, அந்தந்த போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.இந்த வருடாந்திர ஆய்வில் சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு காவல் ஆளினர்களின் கவாத்து, உடை பொருட்களை தணிக்கை செய்தார். பின்னர் 24 இருசக்கர வாகனங்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.அப்போது அந்த வாகனங்களை பார்வையிட்டு அவை சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்றும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா? எனவும், வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் எஸ்.பி. ரவளிப்பிரியா, தஞ்சை ஆயுதப்படை டி.எஸ்.பி. முருகேசன், வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்….

Related posts

காலாண்டு விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் காட்டு மாடுகள்

Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு; மழைப்பொழிவு இருந்தால் பிரச்சனையே இருக்காது :ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி