போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவுவாயில் தானியங்கி மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

 

கோவை, டிச.8: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிக்க வருவார்கள். இதுதவிர ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு புகார் மனுக்களை பெற்று வருகிறார்.

புகார் அளிக்க வரும் பொதுமக்களை சோதனை செய்து அனுப்பும் வகையில் போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவுவாயில் அருகே வெடிகுண்டு கண்டறியும் தானியங்கி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பலத்த சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை