போலி ஆவணம் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் கைது

திருவள்ளூர்: மணவாளநகர் கே.கே.நகர் 4வது தெரு சேர்ந்தவர் கிஷன்லால். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில் தன் மனைவி பெயரில் வேடங்கி நல்லூர் கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இதை அவர் திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருந்தார். அப்போது, புல்லரம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர், ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான நித்தியானந்தம்(70), கிஷன்லாலுடன் வேலையில் சேர்ந்து அவருக்கு உதவி புரிந்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு நித்தியானந்தம் பண முறைகேடு செய்துள்ளார். மேலும், தனக்கு ரூ.20 லட்சம் தரவேண்டும் என மிரட்டி கிஷன்லால் மனைவி பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளார். புகாரின்பேரில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் நித்தியானந்தத்தை கைது செய்தனர். …

Related posts

ஓசூர் அடுத்த சாத்தனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது