போர் தொடர்பாக நாவல் எழுதிய இலங்கை எழுத்தாளருக்கு ‘புக்கர்’ பரிசு

லண்டன்: இலங்கையில் நடந்த போர் தொடர்பாக நாவல் எழுதிய இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ‘புக்கர்’ பரிசு அறக்கட்டளையால் இரண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்று புக்கர் பரிசு இன்னொன்று சர்வதேச  புக்கர் பரிசு.  ஒரு படைப்பு முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அந்த படைப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அதே வேளையில் அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் அதற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுகளுக்கான நோக்கம் பொது நலனுக்காக இலக்கியத்தின் கலை மற்றும் மதிப்பை மேம்படுத்துவதே என்று புக்கர் பரிசுகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த பிரபல புதின ஆசிரியர் ஷெஹான் கருணாதிலக, இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை வென்றுள்ளார். இந்த பரிசுக்காக 50,000 யூரோ தொகை அவருக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய ‘தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா’என்ற புனைவுக் கதைக்காக இந்த புக்கர் பரிசு வழங்கப்பட்டது. இந்த நாவல், விடுதலைப் புலிகள் – இலங்கை ராணுவம் இடையே நடந்த போரில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது….

Related posts

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!