போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி

ஊட்டி: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆண்டு ேதாறும் ஜூன் மாதம் 27ம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஊட்டியில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் அரசு கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி கலந்துக் கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் விளக்கி பேசினார். தொடர்ந்து, மாவட்ட எஸ்பி பிரபாகர் கலந்துக் கொண்டு போதை பொருட்களின் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுக்கும் முறைகள், போதைப் பொருட்களை விற்பனையை தடுக்க தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினார். தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் தடுப்பு உறுதிெமாழி ஏற்கப்பட்டது. மேலும், போதைப் பொருட்களை தடுப்பு குறித்து குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து பதாகைகள் ஏந்திச் சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியல் ஊட்டி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை