போதைப்பொருள் கடத்தல் மையமாகும் குஜராத்?.. நடப்பாண்டில் ரூ. 4,000 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி

காந்திநகர்: சூரத்: பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக மீன்பிடி படகில் இந்தியாவுக்கு கடத்த முயன்ற ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரபிக்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குஜராத் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அம்மாநிலத்தின் ஹெச் மாநில கடற்கரை ஓரம் குஜராத் கடலோர காவல் படையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜக்கோவ் துறைமுகம் நோக்கி வந்த மீன்பிடி படகு ஒன்றை கண்ட அதிகாரிகள் அதை விரட்டி பிடித்து சுற்றி வளைத்தனர். இதையடுத்து படகில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது ஹெராயின் பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் இருந்த 6 போரையும் கைது செய்து ஜக்கோவ் துறைமுகம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 6 பேரும் பாகிஸ்தானியர்கள் என்பது தெரிய வந்தது. போதைப்பொருள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக குஜராத் மாநிலத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக பஞ்சாப் மாநிலத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஹெராயின் போதைப்பொருளை குஜராத்தில் இருந்து கடத்த தயாராக இருந்த டெல்லியை சேர்ந்த இருவர் சிக்கியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு 200 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். பஞ்சாப் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னர்களான ரெஃமோனி, ஹனிசிப், ஒபின்னா ஆகியோர் மோசடியின் ஒரு பகுதியே இந்த கடத்தல் என குஜராத் போலீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. இதேபோல கடந்த பிப். மாதம் படகு வழியாக கடத்த முயன்ற 800 கிலோ போதைப்பொருட்கள் பிடிபட்டது. அதன் தொடர்ச்சியாக மே மாதம் 52 கிலோ, ஜூலை மாதம் 375 கோடி மதிப்பிலான 75 கிலோ, ஆகஸ்டில் 1,026 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களும் சிக்கின. தற்போது ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் கடத்தல் மையமாக குஜராத் மாறி வருகிறதா? என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்….

Related posts

மணிப்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் பயணம்: முன்னதாக அசாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது