போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தை திருமணம் தடுக்க வேண்டும் மாவட்ட கல்வி அலுவலர் வலியுறுத்தல்

பெரம்பலூர்: குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று தேசிய பெண் குழந்தைகள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் வலியுறுத்தினார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தர வின்படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் இணைந்து, தேசிய பெண்குழந்தை தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று பெரம்பலூர் அரசு மகளிர் உயர் நிலைபள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெகநாதன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முகஉதவியாளர் (மேல்நிலை) சுரேஷ் மற்றும் உதவி தலைமை யாசிரியர் மரகதம், சிறப்பு உதவி ஆய்வாளர் மருத முத்து, மாவட்ட குழந்தை கள் நல அலகு பணியாளர் ராதாஜெயலெட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

Related posts

முன்னாள் படைவீரர் நல அலுவலக தகவல்

மனு கொடுக்கும் போராட்டம்

புளிக்குழம்பு சாப்பிட்ட மாணவர் பலி