பொறுப்பேற்பு

சேலம், ஜூலை 2: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மணி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றனர். தற்போது மருத்துவமனையின் டீன், மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை துறைத்தலைவராக பணியாற்றி வந்த மருத்துவர் மணிகாந்தன், தற்போது கூடுதலாக டீன் பொறுப்பை நேற்று ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு சக மருத்துவர்கள், அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை