பொன்னை அருகே சாலையோரம் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னை:  பொன்னை அருகே குமரகுண்டா பகுதியில் சாலையோரம் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த குமரகுண்டா பகுதியில் சித்தூர்- சோளிங்கர் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையோரம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிலர் குளுக்கோஸ் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். மேலும் கடந்த இரு தினங்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் பிளாஸ்டிக் கழிவுகள் நனைந்து துர்நாற்றம் வீசி வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தட்ட அதிகாரிகள் இதுபோல் இரவு நேரங்களில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்