பொன்னேரி மீட்பு கலந்துரையாடல் கூட்டம்

ஜெயங்கொண்டம், ஜூலை 16: ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோழகங்கம் எனும் பொன்னேரி சுமார் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெற்றன. ஆகையால் இந்த பொன்னேரியை மீட்பதற்கான கலந்துரையாடல் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது. இந்த கூட்டம் ஜெகத் கிரிஸ்பா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள், பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஜெகத் கிரிஸ்பா, முன்பு இருந்தது போல் பொன்னேரியை மீட்க வேண்டும். கங்கைகொண்ட சோழபுரத்தை உலக வரலாறு பண்பாட்டு நகராக அறிவிக்க வேண்டும். இந்த கங்கைகொண்ட சோழபுரத்தில் பெருங்கடலின் பேரரசர் ராஜேந்திர சோழனுக்கு 150 அடி உயரத்தில் சிலை வைக்க வேண்டும். இந்த பகுதியை உலக சுற்றுலா தலமாக அறிவித்து, உலக நாட்டு மக்கள் இங்கு வருகை தரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 6ம் தேதி மாரத்தான் போட்டியை மக்கள் இயக்கமாக நடத்த உள்ளதாக கூறினார்.

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்