பொன்னேரி அருகே மண் திருடிய லாரி சிறைபிடிப்பு

பொன்னேரி: மண் திருடுவதாக குற்றம்சாட்டி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணியாறு, லட்சுமிபுரம் தடுப்பணையில் இருந்து காட்டூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. வேளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏரியில் மண் திருடப்படுவதாகக்கூறி அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையோடு ஏரியில் இருந்து மண் திருடப்பட்டு அருகில் உள்ள செங்கல் சூளையில் பதுக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். ஏரியில் இருந்து மண் திருடுவதால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டினர். தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் காட்டூர் காவல்துறையினர் விரைந்து வந்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றனர். இதனால்  அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்