பொன்னமராவதி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் கூட்டம்

 

பொன்னமராவதி, செப். 2: பொன்னமராவதி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர் கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமை வகித்து, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான ஆயத்த கூட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் லாஹிஜான், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உட்பட்ட 49 மையங்கள் புதிய பாரத திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, 861 கற்போர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு, கற்போருக்கு வாசிக்க, எழுத கற்றுக் கொடுக்க வேண்டும். தன்னுடைய கையெழுத்தை போடுவதற்கும், தன்னுடைய ஊர் பெயர், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பெயர்கள், சிறு, சிறு வார்த்தைகளை எழுத வைத்தல், பேருந்து எண்கள் அறிதல் போன்றவற்றிற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு