பொன்னமராவதி அருகே ஆலவயலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

 

பொன்னமராவதி,செப்.20: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பகுதி பொதுமக்கள் பொன்னமராவதி அல்லது கொப்பனாபட்டிக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அவசர சிகிச்சை நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலையுள்ளது.

எனவே ஆலவயலில் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அமைத்து ஆலவயல், பெரியஊரணி, தெக்கிகாடு, ஈசிகூடம், பண்னைக்களம், வடக்கிப்பட்டி, பிடாரம்பட்டி, மணத்தொண்டி, கருமங்காடு பரமன்கூடம், வைரம்பட்டி, சின்னப்பிச்சன்பட்டி, செம்மலாபட்டி, குளவாய்காடு, புலவர்ணாகுடி, குளவாய்பட்டி, இடையாத்தூர், இடையபட்டி, தூத்தூர் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ வசதி பெறமுடியும். என இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு ஆரம்பசுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்