பொன்னமராவதியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

 

பொன்னமராவதி,ஏப்.26: பொன்னமராவதி ஒன்றியத்தில் அமைந்துள்ள லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 3ம் வகுப்பு தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் மாரியப்பன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம். வட்டார வள மைய மேற்பார்வையாளர் நல்ல நாகு ஆகியோர் பயிற்சியின் நோக்கத்தை எடுத்துக் கூறினர்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடராஜன் மேம்படுத்தப்பட்ட கவ எழுத்தும் பயிற்சியினை சிறப்பாக எடுத்துக் கொண்டு மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். மாநில ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் புளோரா பயிற்சி முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறினார். ஆசிரியர் கருததாளர்கள் தமிழ். ஆங்கிலம். கணக்கு பாடங்களுக்கு பாடல். கற்றல் கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி செயல்பாடுகளை செய்து காட்டி பயிற்சி கொடுத்தார்கள். ஆசிரியர் பயிற்றுநர்கள் மைய பொறுப்பாளர்களாக செயல்பட்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை