பொன்னமராவதியில் கிணற்றில் தவறிவிழுந்த கன்றுக்குட்டி மீட்பு

பொன்னமராவதி : பொன்னமராவதியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.பொன்னமராவதி அருகே அரசமலை மதியாணியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் கன்றுக்குட்டி ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அவ்வழியாக சரத் என்பவர் கன்றுக்குட்டி கத்தும் சப்தம் கேட்டு உடனே பொன்னமராவதி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி கன்றுக்குட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை