சென்னை: பொதுப்பணித்துறை ஊர்தி ஒட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, தலைவர் சகாயநாதன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களிலும் நோய் தொற்று போன்ற பேரிடர் காலங்களிலும் பணிபுரிந்து வருகிறோம். ஆகவே, எங்கள் பணிக்கான பாதுகாப்பையும் எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு அரசுத்துறை ஒட்டுநர்கள் பணியை முன்கள பணியாளர் பணியாக அங்கீகரித்து காப்பாற்ற வேண்டும்….