தூத்துக்குடி, ஆக 8: தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் கட்டிட காண்ட்ராக்டர் பலியானார். தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஸ்டீபன் மகன் ஜேசுராஜ் (38). கட்டிட கான்டிராக்டர். நேற்று முன்தினம் மாலை எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பைக் மீது எதிரே வந்த பைக் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜேசுராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கு காரணமான பைக்கை ஓட்டி வந்து, காயமடைந்த வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.