பேட்மின்டன் போட்டிக்கு காட்பாடி அரசு பள்ளி மாணவி தேர்வு சீனாவில் நடைபெறும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்

வேலூர், ஜூலை 25: சீனாவில் ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில் வேலூர் அரசுப்பள்ளி மாணவி தேர்வு பெற்றுள்ளார். சீனாவின் செங்குடு நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிகள் நடக்கிறது. இப்போட்டியில் சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா என ஆசிய நாடுகள் அனைத்தும் பங்கேற்கின்றன. இப்ேபாட்டி 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோர் என இருபிரிவுகளாக நடத்தப்படுகிறது. மேலும் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப்போட்டிகளில் இந்தியாவின் சார்பில் டெல்லி, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, அசாம், ராஜஸ்தான், ஒடிசா, உத்தரபிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து 5 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் 4 பேர் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கலப்பு இரட்டையர் போட்டியிலும், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆதர்ஷினி 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் பங்கேற்கின்றனர். காட்பாடி அரசுப்பள்ளி மாணவியான ஆதர்ஷினி ஏற்கனவே 15 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும், சமீபத்தில் இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு