பேக்கரியை சூறையாடிய 9 பேர் கைது

 

அன்னூர், செப்.1: கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே தனியாருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் அன்னூரை சேர்ந்த அப்துல் ரஹீம்(40) என்பவர் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பேக்கரியில் வடக்கலூர் பகுதியைச்சேர்ந்த பிரபாகரன்(29), ரஞ்சித் குமார்(28), பிரவீன் குமார்(26), கார்த்திக்(40), ராஜசேகர்(31), செந்தில் குமார்(37), கோகுல்ராஜ்(26), சபரி பிரியன்(22), வீராசாமி(32) உள்ளிட்ட 9 பேர் டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.

இதனையடுத்து அப்துல் ரஹீமிடம் சென்ற 9 பேரும் சாப்பிட்டதற்கான பணத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளனர். ஏற்கனவே பாக்கி உள்ளதால் பணத்தை உடனே தருமாறு அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 9 பேரும் சேர்ந்து பேக்கரியில் இருந்த பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். பின்னர், அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்து அப்துல்ரஹீம் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி, அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா, எஸ்ஐ சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அப்துல்ரஹீம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்தனர். பின்னர், அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை