பெர்லினில் வருடாந்திர ஒளி திருவிழா கோலாகலம்: எரிபொருள் தட்டுப்பாட்டால் குறைவான கட்டிடங்களே ஜொலித்தன..!

பெர்லின்: ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வருடாந்திர ஒளி திருவிழா தொடங்கியுள்ளது. ஐரோப்பாவில் ஆட்டி படைக்கும் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை இந்த ஒளி விழாவிலும் எதிரொலித்து உள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒவ்வொரு அக்டோபர் மாதத்திலும் 10 நாள்கள் நடக்கும் ஒளி திருவிழா தொடங்கியுள்ளது. அங்குள்ள பிரண்டன்பெர்க் கட்டிடம் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது. அதில் ஒளிபரப்பான ஒளிப்பட செய்தியில் ஐரோப்பாவை ஆட்டுவிக்கும் உக்ரைன் போர் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. பூமியின் எதிர்காலம் மற்றும் இயற்கை குறித்து விளக்கும் ஒளிப்படங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்று இருந்தன. ஜெர்மனி முழுவதும் இருந்து வந்து குவிந்திருந்த பல ஆயிரம் மக்கள் இந்த ஒளி திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர். ஜெர்மனியில் எரிபொருள் பற்றாக்குறையால் மின்சாரத்தை சேமிக்கும் விதமாக அமலில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கத்தை விட குறைவான கட்டிடங்களிலேயே ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்டிருந்தது. அதாவது, வழக்கமாக 60 கட்டிடங்களுக்கு பதிலாக 35 கட்டிடங்களே ஒளி விழாவில் பல வர்ணஜாலங்களை நிகழ்த்தி காட்டினர். …

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு