பெருமுதலாளிகள் மட்டுமே மத்திய அரசின் கடவுள்கள்: ராகுல் விளாசல்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பட்ஜெட் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். டிவிட்டரில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய பட்ஜெட்டில் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், இளைஞர்கள், விவசாயிகள் நலன் இரண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கானதோ, இளைஞர்களுக்கானதோ அல்ல. 4-5 பெருமுதலாளிகள் நண்பர்கள் மட்டுமே அவர்களுக்கு கடவுளாகத் தெரிகின்றனர். பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பிரதம மந்திரி’ என்ற வார்த்தையை 6 முறையும், ‘கார்ப்பரேட் கம்பெனி’ என்ற வார்த்தையை 17 முறையும் உச்சரித்தார். ஒருமுறை கூட ராணுவம், சீனா என்ற வார்த்தைகள் அவரது உரையில் இடம் பெறவில்லை’’ என்றார்….

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்