பெருந்துறை வேளாண் விற்பனை சங்கத்தில் ரூ.1.63 கோடிக்கு கொப்பரை ஏலம்

 

ஈரோடு, ஆக. 26: பெருந்துறை வேளாண் விற்பனை சங்கத்தில் ரூ.1.63 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது. பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு மொத்தம் 3,560 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், முதல் தரக் கொப்பரைகள் 1,905 மூட்டைகள் வரப்பெற்றிருந்தது.

இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.94.76க்கும், அதிகபட்சமாக ரூ.104.31க்கும் விற்பனையானது. 2ம் தரக் கொப்பரைகள் 1,655 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.20.89க்கும், அதிகபட்சமாக ரூ.103.13க்கும் விற்பனையானது. மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரம் கிலோ எடையிலான கொப்பரைகள் விற்பனையானது. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 63 லட்சம் என விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து