பெரியகுளம் பகுதியில் துவங்கியது 2ம் போக நெல் நடவு பணி

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் குளம் மற்றும் கிணற்று நீரைப்பயன்படுத்தி இரண்டாம் போக நெல் நடவு  பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வந்துள்ளது. இந்நிலையில் குளத்து நீர் மற்றும் கிணற்று நீரை பயன்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள வடகரை பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடியை துவக்கி முதல் போக நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றனர்.  இந்த பகுதியில் ஒரு போகம் நெல் குளத்து நீரைபயன்படுத்தியும் இரண்டாம் போகம் கிணற்று நீரை பயன்படுத்தியும் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் நீரை பயன்படுத்தி என்.எல்.ஆர் என்ற ரக நெல் நடவு செய்து வருகின்றனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை